P1 புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் CCTV கேமரா மூன்றாவது கண் விழிப்புணர்வு முகாம்

P1 புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் CCTV கேமரா மூன்றாவது கண் விழிப்புணர்வு முகாம்


Views: 33 Date: 2 day(s) ago
சென்னை மாநகர காவல்துறை சார்பில் குற்றங்களை தடுக்கும் வண்ணமாக சென்னை நகரம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி சென்னை மாநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் அவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் பல குற்றங்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டதும் குற்றங்கள் தடுத்தும் வண்ணமாக விளங்குகிறது. இதன் ஒரு பகுதியாக P1 புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிவராஜ் ரோடு, கனகராயர் தோட்டம் உள்ளிட்ட பகுதியில் குற்றச்செயல்களை தடுப்பது எப்படி, CCTV கேமராவின் பயன்கள் 'மூன்றாவது கண்" குறித்து P1 சட்ட ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் ரவி, P1 குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் வா.பிரபு, தமிழ்நாடு புதுச்சேரி நிருபர்கள் சங்க தலைவர் காதர் உசேன், பத்திரிகையாளர் ராஜா, ரகு, ராமபூபதி மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.