தமிழக முதல்வருடன் த.ம.மு.க தலைவர் ஜான்பாண்டியன் திடீர் சந்திப்பு...

தமிழக முதல்வருடன் த.ம.மு.க தலைவர் ஜான்பாண்டியன் திடீர் சந்திப்பு...


Views: 108 Date: 2 day(s) ago

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்றச் சங்கம் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி (30.11.2018) அன்று சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் நிறைவேற்றபட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பலனிசமையை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.

மனுவில் உள்ளவை:-

கோரிக்கை 1:

 தமிழகத்தில் தற்போது பட்டியல் சாதிப்பிரிவில் உள்ள குடும்பன்,பண்ணாடி,காலாடி,கடையன்,தேவேந்திரகுலத்தான்,பள்ளன்,வாதிரியான், என பல பெயர்களில் அழைக்கப்படும் சாதிகள் அனைத்துமே தேவேந்திரகுல வேளாளர் சமூக உட்பிரிவுகளாகும்.அதனால் இந்த உட்சாதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுலவேளாளர் என ஒரு மாண்புமிக்க பெயரில் அழைக்க அரசாணை வேண்டும் என்று அரசிடம் தேவேந்திரகுல மக்களின் சார்பாக கோரிக்கையை முன் வைக்கிறோம்.

கோரிக்கை 2 :

தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் சாதியிலிருந்து நீக்கி ''வேளாண்மரபினர்'' என தனிப்பிரிவில் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையையும் தேவேந்திர குல மக்கள் சார்பாக முன் வைக்கிறோம்.

கோரிக்கை 3 :

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற தேவேந்திரகுல மக்கள் நீண்ட கால கோரிக்கையும் தேவேந்திரகுல மக்கள் சார்பாக முன் வைக்கிறோம்.

என அந்த கோரிக்கைகளை ஆவண செய்வதாக தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்தனர்.