50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை

50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை


Views: 8 Date: 2 day(s) ago
ஆசியாவிலேயே மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான பல்நோக்கு மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனைகள் நிறுவனம் (ஏஹெச்இஎல்) (பிஎஸ்இ : 508869) (என்எஸ்இ : APPOLLOHSP) 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. சர்வதேசத் தரத்துடன் உன்னத சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் இந்த புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது. சிக்கலான பைபாஸ் அறுவை சிகிச்சைகள், வால்வு மாற்று சிகிச்சைகள், பீடியாட்ரிக் கார்டியாக் நடைமுறைகள், இதய மாற்று சிகிச்சைகள், குறைந்த ஊடுருவல் கொண்ட அறுவை சிகிச்சைகள் என பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகள் இந்த 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அடங்கும். பரவாத நோய்களில் மிகவும் ஆபத்தான நோயாக உள்ள இதய நோய்க்கு எதிராக போராடி வரும் அப்பல்லோ மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர் சி பிரதாப் ரெட்டி கூறுகையில், “தொற்றாத நோய்கள் இன்றைய காலத்தில் மிகவும் ஆபத்தான நோய்களாக உள்ளன. அவற்றில் இதய நோய் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே எழுபது லட்சம் போ் இதய நோய்களால் மரணம் அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதய நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இது மிகவும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள விழிப்புணர்வு, தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிதல், தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளுதல் போன்றவை அவசியம் ஆகும். அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் சிகிச்சையில் முன்னோடியாக இருந்து மைல் கல்லை எட்டியுள்ள இந்தத் தருணம் எங்களுக்கு பெருமை வாய்ந்தது.” என்றார். அப்பல்லோவில் 80-களில் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி மற்றும் கார்டியாக் கேத்தடெரைசேஷன் ஆகியவை சிறப்பாக செய்யப்பட்டு அவற்றில் இந்த மருத்துவமனை முன்னோடியாகத் திகழந்தது. அதன் பின்னர் பல்வேறு நவீன மருத்துவ முன்னேற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நோய் கண்டறியும் கருவிகள் பல வந்தன. இவை துல்லியமான நோய் கண்டறியும் திறனை வளர்த்ததுடன் சிறந்த சிகிச்சைக்கும் உதவியாக அமைந்துள்ளன. 320 ஸ்லைஸ் சிடி ஸ்கேனர், 64 ஸ்லைஸ் சிடி ஆஞ்சியோகிராபி, டிரான்சோசோஃபகேல் எகோ கார்டியோகிராபி, ஸ்ட்ரெஸ் எகோ கார்டியோகிராபி, எலெக்ட்ரோ பிசியாலஜி போன்றவற்றில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறை கேத் லேப்கள், கார்டியாக் கிரிடிக்கல் கேர் யூனிட், அவசர சிகிச்சைப் பிரிவுகள் போன்றவை வரை முன்னேறி அப்பல்லோ மருத்துவமனை இதயப் பராமரிப்பில் முன்னணியில் உள்ளது. முதல் கரோனரி ஆர்டெரி ஸ்டெண்டிங், முதல் கீ ஹோல் மல்டிபிள் பைபாஸ் அறுவை சிகிச்சை, இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற நவீன செயல்முறைகளை மேற்கொண்டு மைல் கல்களை எட்டிய சென்னை அப்பல்லோ மருத்துவமனை தற்போது 50 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது அந்த மருத்துவமனைக்கு மற்றுமொரு கிரீடம் ஆகும். அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இதய நோய்கள் அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்ஆர் கிரிநாத் கூறுகையில், “அப்பல்லோ மருத்துவமனை, மிகச் சிறந்த அனுபவம் உள்ள, அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய இதய நோய் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் சர்வதேசத் தரத்துடன் அதிநவீன சிகிச்சை நடைமுறைகளை வழங்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இதய நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் என்ற முறையில், இதய நோய்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பது எனது கருத்தாகும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் நல்ல வாழ்க்கை முறை ஆகியவற்றால் சிறந்த முறையில் இந்த தொற்றா நோயாக் கட்டுப்படுத்த முடியும்.” என்றார். சிகிச்சை முறைகளில் முன்னோடியாகத் திகழும் அப்பல்லோ மருத்துவமனையின் செயல்பாடுகளால் பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. அதே சமயம் அப்பல்லோ மருத்துவமனை, உடல் நலப் பரிசோதனைகள் மூலம் இதய நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை முயற்சியிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. வருமுன் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து அப்பல்லோ மருத்துவமனாகள் குழுமத் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், “கார்டியோ வாஸ்குலர் எனப்படும் இதய ரத்த நாள நோய்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போதைய தேவை, இந்த நோய்களைத் தொடர்ந்து கண்காணித்து ஆபத்துக்கான காரணிகளை கட்டுப்படுத்திஸ குறிப்பிட்ட காலத்தில் முறையார பராமரிப்புகளை மேற்கொண்டு இதய நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். அப்பல்லோ மருத்துவமனையின் ஆரோக்கியமான இதய திட்டம் (ஹெல்த்தி ஹார்ட் புரோகிராம்) ஒவ்வொரு தனி நபரும் தங்களது இதய செயல்பாட்டுகளை கண்காணித்து பராமரிக்கலாம்.” என்றார். அப்பல்லோவின் ஹெல்த்தி ஹார்ட் புரோகிராம் திட்டம் தான் இந்தியாவின் முதல் இதய நோய்த் தடுப்புத் திட்டமாகும். ஆதாரப்பூர்மான அறிவியல் அடிப்படையிலான இந்தத் திட்டம் ஒவ்வொரு தனி நபரும் ஆபத்துக் காரணிகளைக் கண்டறிந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை நோக்கிச் செல்லலாம்.