டாக்டர் அம்பேத்கர் சிலையை புனித நீரால் சுத்தம் செய்த வழக்கறிஞர்கள்...

டாக்டர் அம்பேத்கர் சிலையை புனித நீரால் சுத்தம் செய்த வழக்கறிஞர்கள்...


Views: 14 Date: 2 day(s) ago
உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை, தலித் சமூகத்தைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் புனித நீரினால் சுத்தம் செய்துள்ளனர். மீரட் மாவட்டத்தில்இருக்கும் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் டாக்டர் அம்பேதகர் சிலை உள்ளது. இந்த சிலையை மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவருமான ராகேஷ் சின்ஹா மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார். இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மீரட் மாவட்ட நீதிமன்றத்தைசேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அம்பேத்கார் சிலையை புனித நீரால் சுத்தம் செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள் கூறியதாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் டாக்டர்அம்பேத்கரை மனதில் இருந்து அங்கீகாரம் செய்வதில்லை. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இவர்கள் அம்பேத்கரை கொண்டாடுகிறார்கள் . தலித் மக்களை ஏமாற்றவே இதனை செய்கிறார்கள் . இதனால் அவர் தொட்ட அம்பேத்கார் சிலையை நாங்கள் புனிதப்படுத்தினோம் என்று கூறினார்.