அகில பாரத இந்து மகா சபா சார்பில் "இந்துக்களின் பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கும் உண்ணாவிரத போராட்டம்

அகில பாரத இந்து மகா சபா சார்பில் "இந்துக்களின் பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கும் உண்ணாவிரத போராட்டம்


Views: 48 Date: 2 day(s) ago

அகில பாரத இந்து மகா சபா சார்பில் "இந்துக்களின் பறிபோன உரிமைகளை மீட்டெடுப்போம்" என்ற கோரிக்கையை முன்வைத்து மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அகில பாரத இந்து மகா சபாவின் தமிழ் மாநிலத்தலைவர் கல்கி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய அவர்:-

                 பெரும்பான்மையான இந்துக்களின் மத வழிபாட்டு முறைகள், வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்துக்கள் தனக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உருவாக்குவதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் திருக்கோவில்களை பராமரிக்க முடியாமலும் திருக்கோயில் சொத்துக்களை மீட்க முடியாமலும் உள்ளது.

மேலும் நமது பண்பாட்டுச் சின்னங்கள், கடவுள் சிலைகள் களவாடப்படுகிறது. கடவுகளை இலவசமாக தரிசிக்க முடியாமல் அதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகளும் கட்டணங்களும் விதிக்கப்படுகிறது. ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, மத வழிபாடு போன்றவற்றில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களுக்கு எதிராக உள்ளது இதை அகில பாரத இந்து மகாசபா வன்மையாக கண்டிக்கின்றது என்றார். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.