ஆசிரியர் பட்டயத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் P.K.இளமாறன் அறிக்கை

ஆசிரியர் பட்டயத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் P.K.இளமாறன் அறிக்கை


Views: 25 Date: 2 day(s) ago

ஆசிரியர் பட்டயத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் P.K.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் :

தமிழ்நாடு கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும்  தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இரண்டாடுகள் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் 20 ல் தொடங்கி ஜுலை 12 ல் நடந்து முடிந்த ஆசிரியர் பட்டயத் தேர்வு ( DTE ) முடிவுகளில் பல குளறுபடிகள் நடந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது. 7 , 8 மதிப்பெண்கள் பெற்றோர்கள் கூட தேர்ச்சிப் பெற வைத்திருப்பது தேர்வுத்துறையின் மீதே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் மூலம்  தேர்வுத்துறையின் மீதே நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆசிரியர் பட்டயத் தேர்வைக் கூட தேர்ச்சிப் பெற இயலாதவர்கள் எப்படி எதிர்கால சமுதாயத்தினை மேம்படுத்த முடியும்?  ஆசிரியர் பணி புனிதமான பணி அதனை கேவலப்படுத்த நினைப்பவர்களை சமூகவிரோதிகளாக எண்ணத்தோன்றும். கல்வித்துறையினை மேம்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இதுபோன்ற செய்தி வேதனையளிக்கின்றதுபோதிக்க வருபவர்களா , பாதிப்பை ஏற்படுத்தப் போகும் பாதகர்களா இது போன்ற செயல்பாடுகளில் தொடர்புடையவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கும்டி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.