ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது


Views: 6 Date: 2 day(s) ago

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் போலீசார் இன்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, கங்கான் பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுபேர் பட்டை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் காஜிகண்ட் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. பிடிபட்ட பயங்கரவாதியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.