திருப்பதி:ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பெங்களூரு அருகே பறிமுதல். கடப்பா போலீஸார் அதிரடி.

திருப்பதி:ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பெங்களூரு அருகே பறிமுதல். கடப்பா போலீஸார் அதிரடி.


Views: 9 Date: 2 day(s) ago
கடப்பா மாவட்ட போலீஸ் எஸ்பி அபிஷேக் மஹந்தி உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று பெங்களூர் அருகே உள்ள கடிஹனஹள்ளி,ஒஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும் முக்கிய புள்ளிகளை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கடிஹனஹள்ளியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரர் நயாஜ் என்பவரை போலீசார் ரகசிய தகவல் மூலம் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள குடவுன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை கடப்பாவுக்கு கொண்டு வந்த போலீசார் நாயாஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.