அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அகில் பாரத இந்து மகா சபா சார்பில் மகா யாகம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அகில் பாரத இந்து மகா சபா சார்பில் மகா யாகம்


Views: 18 Date: 2 day(s) ago
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அகில் பாரத இந்து மகா சபா சார்பில் மகா யாகம் வளர்க்கப்பட்டது . சென்னை ஓட்டேரி பகுதியில் அமைந்துள்ள செல்ல பிள்ளையார் கோவிலில் அகில் பாரத் இந்து மகா சபை சார்பில் விரைவில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்க வேண்டும் என வலியுறுத்தி சுதர்சன யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தை அயோத்தியில் இருந்து வந்திருந்த பண்டிட் ஆத்ம ராம் திவாரி நடத்தினார். இவர் இந்து மகா சபாவின் தேசிய செயலாளராக உள்ளார். இந்த யாகத்தில் 2 புனித கூடைகள் வைத்து அயோத்தியில் உள்ள அனுமன் சன்னதிக்கும் பெருமாள் சன்னதிக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. உலக நன்மைக்காகவும் அனைவரும் இன்புற்று வாழ வேண்டியும் இந்த மகா யாகம் நடைபெறுவதாகவும் மேலும் இந்துக்களின் புனித பூமியான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் உடனே நடைபெற வேண்டியும் இந்த யாகம் நடத்தப்பட்டதாகவும் அகில் பாரத இந்து மகா சபாவின் தமிழ்மாநில தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்தார். மேலும் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்காவிட்டால் தமிழகம் முழுவதும் இந்துக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.