பல்வேறு இயக்கங்களில் இருந்து விலகி 50பேர் தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் இணைந்தனர்...

பல்வேறு இயக்கங்களில் இருந்து விலகி 50பேர் தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் இணைந்தனர்...


Views: 64 Date: 2 day(s) ago

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் கொள்கையில் சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக செயல்படுகிறது "தொழிலாளர் ஐக்கிய முன்னணி"

இந்த இயக்கத்தின் நிறுவன - தலைவர் வழக்கறிஞர் வா.பிரபு தலைமையில் இன்று பல்வேறு இயக்கங்கள் மற்றும் பிற கட்சிகளில் இருந்து விலகி இளையராஜா, கவியரசு உள்ளிட்ட சுமார் ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் தொழிலாளர் ஐக்கிய முன்னனி இயக்கத்தில் இணைந்தனர்.

மேலும் இது குறித்து பேசிய தலைவர் வா.பிரபு அவர்கள்:-

இன்று பல்வேறு இயக்கத்திலும் கட்சிகளிலும் இருந்து விலகி தொழிலாளர் ஐக்கிய முன்னணி இயக்கத்தில் இணைத்த அனைவருக்கும் புரட்சியாளர் அம்பேத்கரின் ஜெய் பீம் கலந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்து கொள்கிறேன், புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை கோட்பாட்டின் படி செயல்படும் இந்த இயக்கம் தொழிலாளர்களின் நலனுக்காகவும் தமிழக மக்களின் நலமுக்காகவும் தொடர்ந்து போராடும் என்றும் இயக்கத்தில் இணைந்த யாவருக்கும் தகுந்த பதவிகள் வழங்கி இயக்கத்தை வளர்க்கவும் மக்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.