சென்னை ஓட்டேரியில் சிலிண்டர் வெடித்து விபத்து... 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதம்

சென்னை ஓட்டேரியில் சிலிண்டர் வெடித்து விபத்து... 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதம்


Views: 14 Date: 2 day(s) ago
சென்னை, அடுத்த பட்டாளம், சச்சிதானந்தம் தெருவில் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதன் கீழ்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. இன்று ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் முற்பட்டனா். ஆனால் காற்றின் வேகத்தால் அருகில் இருந்த குடிசைகளுக்கும் தீ பரவியது. அப்போது ஒரு வீட்டில் இருந்து அதிக சத்தத்துடன் கியாஸ் சிலிண்டா் வெடித்து சிதறியது. தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் 2 வீடுகளில் என மொத்தம் 3 வீடுகளில் கியாஸ் சிலிண்டா் வெடித்தது. இதனால் அடுத்த்து 8 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வியாசா்பாடி பெரம்பூா் வேப்பேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினா். தீயை அணைத்தனா். குடிசை மாற்று வாரிய பகுதிகளில் சாலைகள் குறுகிய அளவில் இருந்ததால் தீ அணைப்பு வாகனங்களை உள்ளே எடுத்து வர சிரமம் ஏற்பட்டதால் பக்கத்தில் இருந்த உயரமான இடங்களில் இருந்து தீயை அணைத்தனா். இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. 8 குடிசைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தபட்டன. தீ விபத்து காரணம் குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.