தேனியில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா

தேனியில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா


Views: 89 Date: 2 day(s) ago
தேனியில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா மகாஜன சங்க தலைவர் ராஜாராம் துணைத்தலைவர் பாலகுரு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் சென்ற ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நாயுடு மகாஜன சங்க நிர்வாகிகள் ஓராண்டு சிறப்பானசெயல்பாட்டிற்கான பாராட்டு விழாவும் ,10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும் ,வரும் காலங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வழிமுறைகளுக்கான பொதுக்கூட்டமும் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன் தேனி மாவட்ட நாயுடு மகாஜன சங்க இளைஞர் அணி செயலாளர் நவீன் நாயுடு மற்றும் கௌரவ தலைவர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்கள் மேலும் இக்கூட்டத்தில் நாயுடு மகாஜன சங்க நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.