தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்...

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்...


Views: 24 Date: 2 day(s) ago
2019 ஆங்கிலப் புத்தாண்டினை வரவேற்று வாழ்வினைப் புதுப்பிப்போம். கடந்த ஆண்டின் மறைக்க, மறக்க முடியாத உணர்வின் வலிகளால் சுவடுகளைச் சுத்திகரிப்போம். இதயத்திற்கும் சேர்த்து வெள்ளையடிப்போம். முற்போக்கு சிந்தனையோடு ஆணாதிக்கத்தினை ஆழ்மனதிலிருந்து தூக்கியெறிவோம். பெண்ணிணத்திற்கு மகுடம் சூட்டுவோம் செயல்வடிவில். . .சாதி மதங்களைக் கழுவி மனிதத்தைத் தூய்மையாக்குவோம். எல்லோரும் இன்புற்றிருக்க இயன்ற வரை முயற்சிப்போம்.இயலாமையை இல்லாமல் செய்திட இணைந்தே செயல்படுவோம்.மாற்றங்களை நோக்கிப் பயணிப்போம்.மனசுகளைப் பறிப்போம். மனிதநேயம் பூக்கட்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெருவித்துள்ளார்.