சென்னை மாநகராட்சியை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சியை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்


Views: 7 Date: 2 day(s) ago
சென்னை, வியாசர்பாடி எம்.கே.பி. நகர், குறுக்கு தெருவில் வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனம் MLA தலைமையில் திமுகவினர் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்தும், இதனை தடுக்க பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் கழிவுநீர் வாரியத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்னை மாநகராட்சிக்கு எதிராகவும், தமிழக அரசிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். கழிவுநீர் கலக்காத குடிநீர் வழங்கக்கோரி எம்.கேபி. நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் பகுதி பொறியாளரிடன் புகார் மனு அளித்தனர்.