பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களை கட்டுபடுத்த வேண்டும் - தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் கோரிக்கை

பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களை கட்டுபடுத்த வேண்டும் - தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் கோரிக்கை


Views: 18 Date: 2 day(s) ago

தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்:-

தமிழக அரசின் சார்பாக கொண்டு வந்துள்ள நிகிலி(பிளாஸ்டிக்) தடை செய்யபட்டுள்ளது வரவேற்கத்தக்காக உள்ளது.

நிகிலி ஒழிப்பில் முழுமையாக கட்டுபடுத்த முதலில் சம்பந்தபட்ட தயாரிப்பு ஆலைகளை கண்காணிக்க வேண்டும் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நிகிலி ஒழிப்பில் அதிகாரிகள் வியாபாரிகளுடன் கடுமையாக நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன மக்களிடம் தற்போதுதான் விழிபுணர்வு வர தொடங்கியுள்ளது.

மேலும் நிகிலி ஒழிப்பில் முன் எடுத்துச் செல்லவது காலத்தின் கட்டாயமான பணியாகும் மண்ணிற்கும் மனிதர்களுக்கும் சுற்றுசுழுலுக்கும் பாதிப்பு கொடுக்கும் நிகிலியை முற்றிலும் ஒழிக்க வேண்டும் இதில் வியாபாரிகளுடன் கடுமை காட்டும் அதிகாரிகள் தயாரிப்பு நிறுவனங்களிடம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.