சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு EPS, OPS புகழாரம்..

சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு EPS, OPS புகழாரம்..


Views: 7 Date: 2 day(s) ago
திரைப்படம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் புகழாரம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்படி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கான இரங்கல் தீர்மானத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரின் அழகு தமிழுக்கு அனைவரும் மயக்குவார்கள் என புகழாராம் சூட்டினர். மேலும் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசியது குறித்து, முரசொலி நாளிதழில் தன்னை புகழ்ந்து எழுதியதையும் நினைவு கூர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கருணாநிதியின் உடல் மீது கண்ணீர் சிந்தும் துர்பாக்கியத்தை பெற்றுவிட்டேன் எனகூறி கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். தன் பிள்ளைகளை விட தனக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்துக் கொண்டவர் கருணாநிதி என்றும், எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் கருணாநிதி என்றும் மிகவும் உருக்கமாக பேசினார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி உட்பட 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தீர்மானம் வாசித்தார். அப்போது பேசிய அவர், திரைப்படம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என புகழ்ந்துரைத்தார். மேலும் தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி என அடுக்கடுக்கான புகழாரங்களை சூட்டினர். இதையடுத்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.