தான் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்.

தான் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்.


Views: 8 Date: 2 day(s) ago
விழுப்புரம் அருகே பள்ளியில் படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(36). கூலி வேலை செய்து வரும் சங்கருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மற்றோரு வீட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் சங்கரின் மனைவி தனது இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது தனது வீட்டுக்கு சென்ற சங்கர் தனது இரண்டாவது மகளை கடைக்கு அனுப்பி விட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த தனது மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சங்கர், அதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து அவர் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.இதையடுத்து அந்த பெண் வேலைக்கு சென்றுள்ள தனது தாய் வந்தவுடன் வீட்டில் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய், இதுகுறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் புகாரின் பேரில் கூலி தொழிலாளி சக்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த சுழலில் இன்று அதிகாலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.