தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் 12ம் ஆண்டு விழா, கல்வி உரிமை மாநாடு மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் தொடக்க விழா முப்பெரும் விழா..!!

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் 12ம் ஆண்டு விழா, கல்வி உரிமை மாநாடு மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் தொடக்க விழா முப்பெரும் விழா..!!


Views: 41 Date: 2 day(s) ago

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் 12ஆம் ஆண்டு விழா, கல்வி உரிமை மாநாடு மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் தொடக்க விழா என முப்பெரும் விழா சென்னை அகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் P.K.இளமாறன் தலைமையில் பொதுச்செயலாளர் அர்ஜுனன், பொருளாளர் சாந்தி மற்றும் நிர்வாகிகள் கல்வியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக சகாயம் IAS அவர்கள் கலந்துகொண்டு "தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தை" துவக்கி வைத்தும் ஆசிரியப் பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வி மேம்பாட்டிற்காக உழைத்து வரும் 50 பேருக்கு சாதனையாளர் விருது மற்றும் துப்புரவு பணி செய்யும் பணியாளர் 50 பேருக்கு சீர்மிகு தூய்மை விருது வழங்கப்பட்டது.

இதில் நந்தகுமார் IRS மற்றும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அச்சம் ஆசிரியர் என பலர் கலந்து கொண்டனர்