அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 18ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 4ஆம் ஆண்டு தேர்பவனி

அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 18ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 4ஆம் ஆண்டு தேர்பவனி


Views: 8 Date: 2 day(s) ago

சென்னை வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 18ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 4ஆம் ஆண்டு தேர்பவனி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜவகர் பாபு மற்றும் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு தேர்பவனி விழாவை தொடங்கி வைத்தனர்.

மேலும் இதில் ஆலய நிர்வாகிகள் மருதுபாண்டி, தென்னரசு, சிவலிங்கம், அன்பரசு, சுரேஷ், பார்த்திபன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்