இடைத்தேர்தல் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்: அமமுக வேட்பாளர் வெற்றி உறுதி - V.M.S.முஸ்தபா

இடைத்தேர்தல் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்: அமமுக வேட்பாளர் வெற்றி உறுதி - V.M.S.முஸ்தபா


Views: 14 Date: 2 day(s) ago

திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளரும் கழக வேட்பாளருமான எஸ்.காமராஜியின் வெற்றிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் V.M.S.முஸ்தபா தலைமையில் கட்சியின் மாநில , மாவட்ட நிர்வாகிகளின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய V.M.S. முஸ்தபா அவர்கள்:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் எஸ் காமராஜ் அவர்களை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி பாடுபடும் என்றும் அமமுக கட்சியுடன் இணைந்து செயல்படவேண்டிம், மக்கள் செல்வர் தலைவர் டிடிவி தினகரன் அவர்களின் கரங்களை வலுபடுத்தி வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வர் டிடிவி கரங்களில் வெற்றிகனியை ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் V.M.S.முஸ்தபா பேசினார்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் செம்மைG.தமீம் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.