ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை..

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை..


Views: 6 Date: 2 day(s) ago
ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதி அருகே தீவிரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு சில மர்ம நபர்கள் ஊடுருவ முயற்சிப்பதை அறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதால் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம்தான் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.