ரயில் அகில் பாரத் இந்து மகா சபா தமிழக நிர்வாகி மீது தாக்குதல்...!!!

ரயில் அகில் பாரத் இந்து மகா சபா தமிழக நிர்வாகி மீது தாக்குதல்...!!!


Views: 11 Date: 2 day(s) ago
அகில் பாரத் இந்து மகா சபாவின் தமிழக பிரிவின் மாநில தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் கடந்த வாரம் சென்னையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி சிறப்பு யாகம் மற்றும் ராமர் கோவிலில் திருக்குடைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையிலிருந்து சுமார் 50 பேர் அயோத்தி சென்று வரும் வேளையில் மத்திய பிரதேசம் சாட்னா ரயில் நிலையத்தில் சில சமூகவிரோதிகள் அகில் பாரத் இந்து மகா சபா நிர்வாகிகளை நோக்கி கற்கள் வீசினர். கற்களைக்கொண்டு தாக்கியதில் இந்து மகாசபாவின் நிர்வாகி ஒருவர் காயமடைந்தார். இதை கண்ட சக பயணிகள் ரயிலில் கூச்சலிட்டனர், தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பக இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து அகில் பாரத் இந்து மகா சபை தமிழ் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.