அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் M.E. ராஜாவின் தந்தை ஏழுமலை ராமானுஜதாசரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்.!! விரைவில் ரூ5ல் மருத்துவம்

அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் M.E. ராஜாவின் தந்தை ஏழுமலை ராமானுஜதாசரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்.!! விரைவில் ரூ5ல் மருத்துவம்


Views: 55 Date: 2 day(s) ago
அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் Dr.M.E.ராஜா அவர்களின் தந்தை M. ஏழுமலை ராமானுஜதாசர் செட்டியார் இவர் ராமானுஜதாசர் என்ற சிறப்பு பட்டம் பெற்ற இவரின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் தேசிய செயல் தலைவரும் செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தலைவர் அண்டன் கோம்ஸ், தேசிய துணை தலைவர் மா.கி.சங்கர் மற்றும் தேசிய செயலாளர் ஜாய்ஸ்விக்டோரியா அனைவரையும் வரவேற்றி பேசினர். நிகழ்ச்சியில் M.ஏழுமலை ராமனுஜதாசரின் திருவுருவப்படத்தை விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் தலைவரும் முன்னாள் விளையாட்டு குழு தலைவருமான M.E.ரகுபதி, தேசிய பொதுச்செயலாளர் M.E.ராஜா ஆகியோர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தேசிய பொதுச்செயலாளர் Dr. M.E.ராஜா தம் சிறப்புரையில்:- ராமானுஜதாசர் பட்டம் பெற்றவரும் எனது தந்தையுமான M.ஏழுமலை ராமனுஜதாசர் செட்டியாரின் ராயபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தை இப்பகுதி பொதுமக்களும் மீனவ மக்களுக்கும் பயன்படும் வகையில் மிகக் கூடிய விரைவில் மருத்துவமனையாக மாற்றுவேன் என்றும், மருத்துவமனைக்கு 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மறைந்த மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். M.E.ரகுபதி பேசுகையில்:- எங்கள் தந்தையின் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் சென்னையில் உள்ள மீனவ மகளிர் பயன்படும் வகையில் குளிர்சாதன வசதிகள் உடைய மீன் விற்பனை மையம் விரைவில் அரசு துணையுடன் துவங்கப்படும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில மகளிரணி தலைவி சீதா, இளைஞர் அணித்தலைவர் பரணிதரன், தொண்டரணி தலைவர் டேவிட், தலைமை நிலைய செயலாளர் மரியதாஸ், அமைப்புச் செயலாளர்கள் செல்வகுமார் , ஜி.கே. நாராயணன், தேசிய துணை தலைவர் ராஜ், செயற்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் காந்தி, மற்றும் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ராஜாத்தி ஆறுமுகம், வரலட்சுமி மரிய விஜி ஆதிலட்சுமி எஸ் எம் பாஸ்கர் முருகவேல் செந்தில்குமார் கன்னியப்பன் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் மீனவ மக்களும் கலந்து கொண்டனர்.