மீனவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதாக டிடிவி தினகரன் மீது வழக்கு தொடர முடிவு : அகில இந்திய மீனவர் சங்கம் செய்தியாளர் சந்திப்பு

மீனவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதாக டிடிவி தினகரன் மீது வழக்கு தொடர முடிவு : அகில இந்திய மீனவர் சங்கம் செய்தியாளர் சந்திப்பு


Views: 19 Date: 2 day(s) ago
மீனவ சமுதாய மக்களை இழிவாக பேசிய RK நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனுக்கு அகில இந்திய மீனவர்கள் சங்கம் கண்டனம். சென்னை காசிமேட்டில் உள்ள அகில இந்திய மீனவர் சங்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்தித்தனர் இந்த சந்திப்பில் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவரும் செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் ரவி, மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவரும் செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் ரவி பேசுகையில்:- ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் மீனவர்களின் நம்பிக்கையான வாக்குகளை பெற்றுவிட்டு ஸ்டாலினை விமர்சித்ததற்காக மீனவர் சமுதாய மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள மீனவர்கள் அவமதிக்கும் விதமாக ஸ்டாலினை விமர்சிப்பதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களை பாதித்துள்ளது. ஸ்டாலின் மீன் வியாபாரம் செய்கின்றாரா என்று தினகரன் ஸ்டாலினை விமர்சித்தார். அவர் இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம், எதிராக போராட்டங்கள் நடத்துவோம் என்று அகில இந்திய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் அவர் கட்சிக்கு மீனவ சமுதாய மக்கள் வாக்களிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஆர் கே நகரில் அவரை வெற்றிபெறச் செய்வதற்காக மீனவர்கள் அனைத்து வேலைகளும் செய்தும் ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது போன்றே தெரியவில்லை இந்த சட்டமன்றத்தின் பணிகளை சிறப்பாக ஆற்றவில்லை மற்றும் தொகுதிக்கு வரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பின் போது அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய அமைப்பு செயலாளர் செல்வகுமார், தேசிய துணைத் தலைவர் மா.கி. சங்கர், மாநில தலைவர் ரமேஷ், மாநில இளைஞரணி தலைவர் பரணிதரன், மாநில அமைப்பு செயலாளர் எஸ் எம் பாஸ்கர், மகளிர் அணி தலைவி சீதா ஆகியோர் உடன் இருந்தனர்