ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தர்  பிறந்த நாள் விழா .

ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தர்  பிறந்த நாள் விழா .


Views: 22 Date: 2 day(s) ago
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 156வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.            விழாவிற்கு மாவட்ட செயலாளர்  டாக்டர் எஸ்.பி.எம் செல்வம் தலைமை தாங்கி சுவாமி விவேகானந்தரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கை ராஜ், நகர தலைவர் மணிஷ்வரன் ,துணைத் தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் முனீஸ்வரன் , ஒன்றிய துணை தலைவர் கண்ணன் , ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சென்றாயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.