மீனவர்கள் படகு மீது மோதிய இலங்கை கப்பல் : ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு

மீனவர்கள் படகு மீது மோதிய இலங்கை கப்பல் : ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு


Views: 9 Date: 2 day(s) ago
இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதில் சேதமடைந்த படகில் இருந்து கடலில் விழுந்த ராமேஸ்வரம் மீனவர் இலங்கையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் விசைப்படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சச்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் 3 படகுகள் மீது மோதியுள்ளனர். இதில் இரண்டு படகுகள் தண்ணீர் மூழ்கியதால், அதிலிருந்த 8 மீனவர்களை கடலில் குதித்துள்ளனர். அவர்களில் 7 பேர் மீட்கப்பட்டு மற்றொரு படகில் தப்பித்து கரைக்கு வந்துள்ளனர். கடலில் குதித்த முனியசாமி என்ற மீனவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்து சடலமாக இலங்கை கடல் பகுதியில் மிதந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு இலங்கை கடற்படை முகாமில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே முனியசாமியின் உடலை மீட்டுத்தர அவரது உறவினர்கள்0 கோரிக்கை விடுத்துள்ளனர். கடலில் மூழ்கடிக்கப்பட்ட 2 படகின் நிலை குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. மேலும் நேற்று புதுக்கோட்டை, ஜெகதாபட்டிணம், ராமேஸ்வரம் மீனவர்கள்  27 பேரை எல்லை தாண்டு மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 5 படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். இதற்கு மீனவ பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தி  வருவதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.