சபரிமலை கோவிலில் வழிபாடு செய்த இரண்டு பெண்கள் பாதுகாப்பு கோரி வழக்கு

சபரிமலை கோவிலில் வழிபாடு செய்த இரண்டு பெண்கள் பாதுகாப்பு கோரி வழக்கு


Views: 14 Date: 2 day(s) ago
சபரிமலை கோவிலில் வழிபாடு செய்த இரண்டு பெண்கள் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைந்து தரிசனம் செய்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து அம்மிணி ஆகியோர் கோவிலில் நுழைந்த 50 வயதுக்கு குறைவான முதல் பெண்கள் என்ற பெயரை பெற்றனர். அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மிரட்டல் காரணமாக தலைமறைவாக இருந்த அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் வீடு திரும்பினர். அப்போது மாமியாரால் தாக்கப்பட்ட கனகதுர்கா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். இந்நிலையில் பாதுகாப்பு கோரி இருவரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.