RTI ACT மூலம் கேள்வி கேட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நபர் மீது கொலை முயற்சி, சாதிவெறி தாக்குதல் - ஏர்போர்ட் த.மூர்த்தி கண்டனம்..!!

RTI ACT மூலம் கேள்வி கேட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நபர் மீது கொலை முயற்சி, சாதிவெறி தாக்குதல் - ஏர்போர்ட் த.மூர்த்தி கண்டனம்..!!


Views: 65 Date: 2 day(s) ago
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் வானம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜு முருகன் இவர் Sc சமூகத்தை சார்ந்தவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த பொங்கல் விழாவிற்காக சொந்த ஊரான வானம்பட்டுற்கு சென்றிருந்தார் அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கல்மேடு மனோகரன் மற்றும் துணை தலைவர் ஞானவேல் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்ட காரணத்தினால் அவரது சாதிப் பெயரைப் பயன்படுத்தி " தாழ்ந்த சாதியை சேர்ந்த நீ என்களேயே கேள்வி கேட்கிறாயா என்று " ஒருமையில் திட்டியும் மிரட்டும் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்கியதில் ராஜூமுருகன் தலை மற்றும் உடல் முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கியவர்கள் மீது அரசும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நபர் சார்பாக புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி வலியுறுத்தினார்.