பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் "சாலை பாதுகாப்பு விழா"

பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் "சாலை பாதுகாப்பு விழா"


Views: 23 Date: 2 day(s) ago

பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் அதன் மாநில தலைவர் அழகர் செந்தில் ஒருங்கிணைப்பில் "சாலை பாதுகாப்பு விழா" சென்னை கிண்டி பட்ரோட்டில் உள்ள புனித ஹாலன்ஸ் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1,000க்கும் அதிகமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

மேலும் சென்னையிலுள்ள பேருந்து நிலையம், பெட்ரோல் பங் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் பொதுமக்களிடம் "சாலை விதிகளை பின்பற்றுவேன்" என்று உறுதி அளிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் போது பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.