ராயபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் ஆலயத்தின் 3வது அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா

ராயபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் ஆலயத்தின் 3வது அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா


Views: 15 Date: 2 day(s) ago
சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் ஆலயத்தின் 3வது அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவில் ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 5000பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினர். மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆக்டோபஸ் மெரைன் T.சாந்தன், B.L. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் B.லோகநாதன், இந்திய மீனவர் சங்க தலைவர் M.D. தயாளன், SVS ஆயில் மில் உரிமையாளர் பாஸ்கரன், நிர்வாக தர்மகர்த்தா கனிமொழி மேகநாதன், தர்மகர்தாக்கள் எம்.சிவராமன், ஆர்.சுதர்சனம் மற்றும் ஆலய நிர்வாகிகள் M.ரங்கநாதன், ஆர்.ரமேஷ் ஏ.மனோகரன், எம். ஜெயக்குமார், ஆர்.புண்ணியவேல், டி. மாதவன், டி.ஜெயகாந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலய உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.