பால் விலை உயர்வு: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தலைவர் பொன்னுச்சாமி

பால் விலை உயர்வு: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தலைவர் பொன்னுச்சாமி


Views: 11 Date: 2 day(s) ago
தனியார் பால் விற்பனை விலை உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் பால் முகவர்கள் சங்கம் செய்தியாளர்களை சந்தித்தனர் சென்னை அயனாவரத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தலைவர் பொன்னுச்சாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியது தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் தங்களுடைய ஆரோக்கியா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக நேற்று அறிவித்தது இது ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான செயல் இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் தேவைப்படக்கூடிய பாலில் சுமார் 83.4% பால் தேவைகள் தனியார் பால் நிறுவனங்களை சார்ந்து இருக்கும் சூழல் உள்ளது இந்நிலையில் ஒரு லிட்டர் 48 ரூபாய்க்கு விற்ற நிலையில புதிய விலையின்படி லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதலாக ஒரு லிட்டர் பால் 50 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று ஹட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது அதுமட்டுமின்றி சுமார் 95% தேனீர் கடைகள் உணவகங்கள் தனியார் பால் உபயோகித்து வருவதால் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வு காரணமாக தேநீர் காபி மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்கள் விலை கடுமையாக உயரும் இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். ஹட்சன் நிறுவனம் அறிவித்துள்ள பால் விற்பனை விலை உயர்வு அறிவிப்பு தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள இதர தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்கிற சந்தேகம் இருப்பதால் இந்த பால் விற்பனை விலை உயர்வை விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.