எழும்பூர் MLA கே.எஸ்.ரவிச்சந்திரன் நிதியில் புதிய ரேஷன் கடை P.K.சேகர்பாபு திறந்து வைத்தார்.

எழும்பூர் MLA கே.எஸ்.ரவிச்சந்திரன் நிதியில் புதிய ரேஷன் கடை P.K.சேகர்பாபு திறந்து வைத்தார்.


Views: 58 Date: 2 day(s) ago
சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதி 77வது வட்ட திமுக சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மோதின்லால் தெரு மற்றும் பழைய ஆட்டு தொட்டி தெருவில் புதிய கூட்டுறவு பண்டக சாலை (ரேஷன் கடை) பல்நோக்கு கட்டடிடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய பல்நோக்கு கட்டிடத்தை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு MLA மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சொ.வேலு, வட்ட செயலாளர் மு.கமலக்கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் தொகுதிக்கு உட்பட்ட சேத்பட் பகுதியில் ரூபாய் 34லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம், உள்ளிட்ட மொத்தம் 60லட்சத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.