தமிழக முதல்வர் மீது வீண் பழி சுமத்திய திமுகவை கண்டித்து அதிமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக முதல்வர் மீது வீண் பழி சுமத்திய திமுகவை கண்டித்து அதிமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


Views: 29 Date: 2 day(s) ago
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் அதிமுக அரசையும், அமைச்சர்களையும் தொடர்ந்து விமர்சித்து வரும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்தும், மத்திய அரசு தமிழக அரசுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரி நிலுவை தொகையான ரூ.7,000கோடியை வழங்க வேண்டும் , கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 ஆயிரம் கோடி நிதி தமிழக அரசு உடனே வழங்க கோரியும், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் முஸ்லீம் மக்கள் கழக தலைவர் ஜெய்னுதீன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய சிறுபான்மை கழக தலைவர் சதக்கத்துல்லா மௌலானா, MIM கட்சி தலைவர் செங்கை ஷர்புதீன், ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ், மக்கள் தேசம் கட்சி தலைவர் சாத்தை A. பாக்கியராஜ், ஜீவா கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுபஹான் உள்ளிட்ட சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசு தமிழகத்திலுள்ள உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பராமரிப்பு பணிக்காக நிதி ஒதுக்கி தமிழக முதல்வருக்கு அமைச்சர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.