ராஜா கம்பளத்துமேன்மக்கள் அறக்கட்டளை சார்பில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை வழங்கும் விழா

ராஜா கம்பளத்துமேன்மக்கள் அறக்கட்டளை சார்பில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை வழங்கும் விழா


Views: 283 Date: 2 day(s) ago
காளஞ்சிபட்டியில் ராஜா கம்பளத்துமேன்மக்கள் அறக்கட்டளை சார்பில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை வழங்கும் விழா அறக்கட்டளை செயலாளர் ராமராஜ் தலைமையிலும் செந்தில் அப்பையன் முன்னிலையிலும்நடைபெற்றது. ஏழை எளிய மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குகல்வி உதவி தொகை வழங்குவதை பற்றியும் அரசு வேலை வாய்ப்பு TNPSC மூலம் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சியை மாணவர்களுக்குஅதிகபடுத்துவதை பற்றியும் அறக்கட்டளைசெயலாளர் ராமராஜ் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். அறக்கட்டளை மூலம் அரசாங்க தேர்வு பயிற்சி மையங்களுக்கு 12 மாணவர்கள், வேலை வாய்ப்பு வழிகாட்டல் முலம் 21 நபர்கள், கல்வி உதவி தொகை 2 நபர், படிப்பு மற்றும் கல்லூரி தேர்வு வழிகாட்டால் 2 நபர்களுக்கும் , வாடி பட்டியில் நூலகம் அமைத்ததில் புத்தகங்கள் வழங்கியது போன்ற செயல்பாட்டின் அறிக்கையை செந்தில் அப்பையன் வாசித்தார். அறக்கட்டளையின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகள் நவநீதன்,மலை முத்து, பெருமாள் சாமி, ஜெயசுந்தரி, ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . மேலும் இக் கூட்டத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.