மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்


Views: 21 Date: 2 day(s) ago

மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை பட்டினம்பாக்கம் பஸ் டிப்போ அருகில், சீனிவாசபுரம் சமூக நலக்கூடம் கட்சியின் மாநில தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது கட்சியின் மாநில தலைவர் சங்கர் கூறுகையில்:-

மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் மீனவர்களுக்கு என தனி நலவாரியம் அமைப்பதாக அறிவித்துள்ளது, இதை மீனவர் மக்கள் முன்னணி வரவேற்கிறது. அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடியும் தருவாயில் இந்த அறிவிப்பு கேலிக்கூத்தாக உள்ளது, இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழக அரசு எக்காரணத்தைக் கொண்டும் ஆலையை திறக்க கூடாது, அதற்காக நாங்கள் அரசுக்கு ஆதரவாக இருப்போம் மேலும் ஆலை திறக்கப்பட்டால் மீனவ மக்கள் துணையுடன் நாங்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் , முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது மாநில துணைத்தலைவர் தேசப்பன், பொதுச் செயலாளர் நாக்ஸ் பெர்னாண்டோ, பொருளாளர் ரூபேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.