நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி...

நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி...


Views: 114 Date: 2 day(s) ago

நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி... 

திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது  பரிதாப சம்பவம்....


தனியார் பஸ் மோதியது:-

பண்ருட்டி திருவதிகை செட்டிபட்டறை காலனியை சேர்ந்தவர் ஜெயக்கொடி மகன் தேவா(வயது 23). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அரிகிருஷ்ணன்(26) என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று காலையில் புதுச்சேரி கரையாம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும், அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம்–சொர்ணாவூர் சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே வந்தபோது, நெல்லிக்குப்பத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி:-

இதில் தேவாவும், அரிகிருஷ்ணனும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்து நடந்ததும் டிரைவர், பஸ்சை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் செட்டிபட்டறை காலனி மக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு இறந்து கிடந்த 2 பேரது உடல்களை பார்த்து கதறி அழுதனர். பின்னர் சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.