இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து.....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து.....


Views: 59 Date: 2 day(s) ago

திருப்பூர் வடக்கு மாவட்டம் மங்கலம் ஒன்றியம் மங்கலம் பிரைமரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. மங்கலம் பிரைமரித் தலைவர் ஜக்கரிய்யா சேட் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சையத் முஸ்தஃபா, துணைத் தலைவர்கள் ஜெயினுலாபுதீன், மங்கலம் முஸ்தஃபா, வடுகன்காளிபாளையம் பஷீர் அஹமத், ரபீதீன், துணைச் செயலாளர் அலிஃப் பாபுஜி, ஊத்துக்குளி சேக் அப்துல்லாஹ், எஸ்டியூ மாநில இணைச் செயலாளர் ஜெயினுலாபுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் இப்ராஹீம் வரவேற்றார்.

சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இச்சீர்மிகு விழாவில் திருப்பூர் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சில்வர் வெங்கடாச்சலம், மங்களம் ஊராட்சித் தலைவர் பாலாமணி சிப்ரமணியம், துணைத் தலைவர் அஸ்கர் அலி, தி.மு.க சார்பில் எஸ்.எம்.பி.மூர்த்தி, தம்பண்ணன், ரபீதீன், த.மா.கா. சார்பில் கண்ணன், மணி, மோகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பாலு, தே,மு,தி,க சார்பில் ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஹக்கீம், பாபு, த.மு.மு.க . சார்பில் உமர் பாய், சாதிக் உட்பட ஏராளமான அரசியல் கட்சி நிர்வாகிகளும், ஜமாஅத் நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட எ,ஒய்.எல். அமைப்பாளர் சிராஜ்தீன், எஸ்.டி.யூ. இர்ஃபான், சல்மான், பிரைமரி செயலாளர் சாதிக் அலி மற்றும் மங்கலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.