தமிழகம் முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையுடன் கொண்டாட்டம்...

தமிழகம் முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையுடன் கொண்டாட்டம்...


Views: 77 Date: 2 day(s) ago

தமிழகம் உட்பட நாடு முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய மார்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின்போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் பிறை தெரியாததை அடுத்து ஜூலை 7 ம் தேதி அதாவது இன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அவரால் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கேரளா, காஷ்மீர், தமிழகத்தின் சில பகுதிகள் உள்ளிட்டவற்றில் நேற்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் ஏமன், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் ரமலான் திருநாள் கொண்டாடப்பட்டது. அங்கு மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் கூடிய ஆயிரக்கணக்கான ஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரம்ஜான் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.