அவிநாசி வடக்கு ஒன்றியத்தின் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்....

அவிநாசி வடக்கு ஒன்றியத்தின் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்....


Views: 59 Date: 2 day(s) ago

திருப்பூர் மாநகர் மாவட்டம் அவிநாசி வடக்கு ஒன்றியத்தின் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் அவிநாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேவூரில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி பேசியதாவது:

                        "விரைவில் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் நமது பணியை சிறப்பாக்கி 100 சதவீத வெற்றியை பெற நாம் எல்லாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆலோசனைகளை அளித்து இருக்கிறார்கள். கழகத்தை பொருத்த மட்டிலும் ஒரு மிகப்பெரிய இயக்கமாக, தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய இயக்கமாக, 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்யுமளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இயக்கமாக நமது கழகம் திகழ்கிறது. இதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்த திட்டங்கள்தான். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் மக்களுக்கான திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது. இதனால் தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த மாதம் நடந்த செயற்குழுவில் கூட இது பற்றி கூறினார்கள். அவர் கூறும்போது ‘ அனைவருக்கும் யாரும் தராத அளவுக்கு திட்டங்களை தந்து இருக்கிறோம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அளவுக்கு சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்து உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். 234 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தேர்தலில் கழகம் 134 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்று உளவுத்துறை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்று கேட்ட அம்மா அவர்கள். கொங்கு மண்டலம் மட்டும் தான் முழு வெற்றியை தந்து இருக்கிறது என்று கூறினார்.

கழகத்தை பொறுத்தவரை வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். சட்டமன்ற தேர்தலில் குறைந்த வெற்றி விகிதத்தை ஈட்டும் வண்ணம் உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என அம்மா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். திருப்பூர் மாநகர் மாவட்டத்தை பொறுத்தவரை 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கருத்து வேறுபாடுகளை மறந்து அம்மா அவர்களின் முழுமையான வெற்றிக்காக பாடுபட வேண்டும். அவ்வாறு சிறப்பாக பாடுபட்டால் அம்மா அவர்கள் நமக்கு வாய்ப்புகளை கொடுப்பார்கள். முழுமையான வெற்றியை பெற்று மாநகர் மாவட்டம் அம்மா அவர்களின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

அவிநாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் நமது கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய பாடுபட வேண்டும்  என்று பேசினார் .  

இந்நிகழ்ச்சியில் அவிநாசி ஒன்றிய செயலாளர்கள் சேவூர் ஜி.வேலுசாமி, மு.சுப்பிரமனியம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், மாவட்ட  மாணவர் அணி செயலாளர் ஆர்.அன்பகம்திருப்பதி, மாவட்ட அம்மா பேரவை இனை செயலாளர் அவிநாசி ஜெகதீசன், மா வட்ட ஊராட்சி துனை தலைவர் ஆனந்த குமார், முன்னாள் எம்.எல்.ஏ கள் ஏ.ஏ.கருப்பசாமி, பிரேமா மற்றும் கழக நிர்வாகிகள் ராமசாமி, எஸ்.ஆர்.சுப்பிரமணியம், சிவனேசன், தங்கவேல், சிந்தாமணி முருகேசன்,  பி.ஆர்.ஜெகனாதன், டி.ஏ.நடராஜ், எஸ்.மனோகரன், சின்னகன்னு, கவுண்சிலர் மோகன், எஸ்.கே.கனகராஜ், வி.எஸ்.ராமசாமி, தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.