நீதிபதிக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது...

நீதிபதிக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது...


Views: 79 Date: 2 day(s) ago

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தளவாய்பட்டிணத்தை சேர்ந்த முறுக்குவியாபாரி மனோகர் மீதான குற்றவழக்கில் வழக்கறிஞரை நியமனம் செய்யாமல் அவரே ஆஜராகிவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கிற்காக தாராபுரம் நீதிமன்றத்திற்கு வந்த மனோகர், அப்போது தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொள்ளாத்தால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நீதிபதி சசிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மனோகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.