திருப்பூரில் சாயப்பட்டறை அவலங்கள்...

திருப்பூரில் சாயப்பட்டறை அவலங்கள்...


Views: 70 Date: 2 day(s) ago

ஊத்துக்குளி பகுதி சாயப்பட்டறையில் தாசில்தார் ஆய்வு ஊத்துக்குளி பகுதியில் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் ஆற்றில் கலந்துவிடுவதால் அப்பகுதி மக்கள் பல முறை போறட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று பல்லவராயன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இரட்டைகிணறு பகுதி விவசாய தோட்டத்தில் மறைமுகமாக ஒரு மெசினை வைத்து துணிகளுக்கு சாயம் ஏற்றி வந்தனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலர் ஊத்துக்குளி வட்டாச்சியரிடம் இரட்டை கிணறு பகுதியில் முத்துச்சாமி என்பவரது தோட்டத்தில் முறையான அனுமதி இல்லாமல் சாயப்பட்டறை செயல்படுவதாகவும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் குழிவெட்டி பூமிக்கு அடியில் விடுவதாகவும் புகார் தெரிவித்தனர் மேலும் இதனால் இப்பகுதி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் குடிக்கபயன்படுத்தும் குடிநீரிலும் சாயக்கழிவு நீர் கலப்பதினால் இப்பகுதி மக்களும் கால்நடைகளும்  பாதிக்கப்படுவதாகவும் கழிவுநீரை தேக்கி வைப்பதினால் சுற்றுப்புறத்தில் துர்நாற்றம் ஏர்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் ஜெய்சிங் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் திருப்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேர் முத்துச்சாமியின் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அனுமதி இல்லாமல் சாயப்பட்டறை நடத்திவந்தது தெரியவந்தது. மேலும் அதிகாரிகள் வருவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் தாசில்தார் நில உரிமையாளரிடம் 24 மணி நேரத்தில் சாயக்கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.