கடலூரில் அனைத்து கட்சி கூட்டம்: விரைவில் மாபெரும் போராட்டம் அறிவிப்பு....

கடலூரில் அனைத்து கட்சி கூட்டம்: விரைவில் மாபெரும் போராட்டம் அறிவிப்பு....


Views: 67 Date: 2 day(s) ago

கடலூரில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட அலுவலகத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்றது. இதில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்   கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சிபிஐ மாவட்ட செயலாளர் மணிவாசகம், காங்கிரஸ் சார்பில் வழக்கறகஞர் சந்தரசேகர், சிபிஎம் மாவட்ட துணை செயலாளர் குளோப், உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்காததையும் கண்டித்தும், அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கு உரிய மரியாதை வழங்காத மாவட்ட காவல்துறையினரை கண்டித்து வரும் 30 ஆம் தேதி காவல்துறை DSP அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, 

மேலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து விரைவில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.