வர்தா புயலில் துப்புரவு பணியாற்றிய நாமக்கல் மாவட்ட ஊராட்சி துப்பரவு பணியாளர்களுக்கு பாராட்டு...

வர்தா புயலில் துப்புரவு பணியாற்றிய நாமக்கல் மாவட்ட ஊராட்சி துப்பரவு பணியாளர்களுக்கு பாராட்டு...


Views: 43 Date: 2 day(s) ago
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் சமீபத்தில் ஏற்ப்பட்ட வர்தா புயல் காரணமாக நாமக்கல் மாவட்ட ஊராட்சி துப்பரவு பணியாளர்கள் 65 பேர்கள் தமிழக அரசின் ஏற்ப்பாட்டின் படி சென்னை சென்று 13 வது மண்டல பகுதிகளில் தீவிர துப்பரவு பணியில் ஈடுபடட்டனர் அவர்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் அனுப்பி வைத்திருந்தார் இவர்களின் தீவிர பணியை பாராட்டி பெருநகர சென்னை மாநகராட்சி 13 வது மண்டல ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் (கல்வி) வர்தா புயல் நிவாரணம் பணிகள் மற்றும் மேற்பாவை அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்டு வழங்கிய பெருநகர சென்னை மாநகராட்சி பாராட்டு சான்றிதழ்களை இன்று 26.12.2016 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தனது அலுவலகத்திற்கு அழைத்து அவரகளிடம் தனித்தனியாக வழங்கி அவர்களை பாராட்டினார் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட அருண்குமார்,வீரமணி,பெருமாள்,ராமலிங்கம்,பாலசுப்பரமணியம், உள்ளிட்ட 65 பேர்களும் தங்களை நேரில் அழைத்து இந்த சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியத்திற்கு நன்றி தெரிவித்தனர்.