17வருடங்கள் ஆகியும் இன்னமும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்...

17வருடங்கள் ஆகியும் இன்னமும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்...


Views: 50 Date: 2 day(s) ago

திருப்பூர் மாவட்டம்  வடக்கு புறநகர் பகுதியான காளிபாளையம் ஊராட்சி குருவாயூரப்பன் நகர் பகுதியில் வாழும் மக்கள் 1450-குடியிருப்பு மற்றும் 7000-பேர் மக்கள் தொகையில் கணக்கெடுப்பில் வசித்துவருகினறனர் இந் நிலையில் கடந்த 4மாதங்களாக குடிதண்ணீர் வராத காரணத்தினால் பேரூராட்சி தலைவர்களிடமும், காளிபாளையம் பஞ்சாயத்துதலைவர் பொண்னுலிங்கமஅவர்களிடமும் பல முறை இப் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர் இதற்கு எவரும் செவி சாய்க்கவில்லை அதனால் கொதிப்படைந்த அப் பகுதிவாழ்மக்கள்  சாலைமறியல் செய்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் இந்த ஊரானது தோன்றி17வருடங்கள் ஆகி விட்டது அடிப்படை வசதிகளான நிலையான ரேஷன்கடை, அரசுப்பேருந்து போக்குவரத்து இல்லாமை, தெருவிளக்குகள், சாக்கடைவசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர் ஆகையால் காளிபாளையம் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகமும் உடனடியாக நடவடிக்கைஎடுக்குமாறு குருவாயூரப்பன் ஊர் மக்கள் சார்பில்   கோரிக்கை வைத்துள்ளனர்.