இந்திய இஸ்லாமிய முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் இஃப்தார் விருந்து ஆளுநர் பங்கேற்பு...

இந்திய இஸ்லாமிய முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் இஃப்தார் விருந்து ஆளுநர் பங்கேற்பு...


Views: 23 Date: 2 day(s) ago
இந்திய இஸ்லாமிய முன்னேற்ற கூட்டமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி தலைவர் டாக்டர் அ.முகமது புரோஸ்கான் தலைமையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் சிறப்புடன் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ஆற்காடு இளவரசர் முகமது அப்துல்லா அலி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்திய இசுலாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செங்கை சர்புதீன், ஷாஜாகான், சலிமுதீன் காயல் இளவரசு, மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டனர்.